வந்தே மாதரம் பாடல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது!
உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்த் நகரில் ஜம்மியதே உலமாயே ஹிந்த் அமைப்பின்சார்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்களில் வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதும் ஒன்றாகும்.
இம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று சங்பரிவார கும்பல் கூச்சலிட்டு வருகின்றனர்.
சங்பரிவாரம் என்னதான் கூக்குரல் போட்டாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் வந்தே மாதரம் பாடலை பாடவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறோம்.
வரலாற்று ரீதியாக இப்பாடன் தோற்றம் முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்பாடன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்பதால்தான் இப்பாடலை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.
வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற பெயரில் ஒரு நாவல் எழுதப்பட்டது. இந்து – முஸ்லிம் மோதலை மையமாகக் கொண்ட இந்நாவல், வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுவோர் இந்துக்கள் என்றும், பாட மறுப்போர் முஸ்லிம்கள் என்றும் இனம் காணப்பட்டு அதனடிப்படையில் முஸ்லிம்கள் அழித் தொழிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்துக்களின் கொள்கைப் பிரகடனமாக இப்பாடல் அமைந்துள்ளதால்தான் இந்துத்துவா சக்திகள் இப்பாடலைப் பாடுவதை தேச பக்தியின் அடையாளமாகச் சித்தரிக்கின்றனர். ஒரு காலத்தில் காங்கிரஸ் மாநாடுகளிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இப்பாடல் பாடப்பட்டு பின்னர் முஸ்லிம்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
1950ல் “ஜனகனமன…” என்பது தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டு வந்தே மாதரம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டது.
ஆனாலும் சங்பரிவாரத்தினரும், சினிமாக் கூத்தாடிகளும் வந்தே மாதரம் என்பதுதான் தேச பக்தியின் அடையாளம் என்பது போல்தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர்.
வந்தே மாதரம் என்பதன் பொருள் என்ன? “வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்று பாரதியார் பாடி நாடு எனும் தாயை வணங்குகிறோம் என்பதுதான் இதன் பொருள் என்று சொல்த் தருகிறார்.
முஸ்லிம் சமுதாயத்தின் கோடாரிக் காம்பான ஏ.ஆர். ரஹ்மான்என்பவரும் வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே வணக்கம் என்று இசை அமைத்து, இதன் அர்த்தத்தை அனைவரையும் அறியச் செய்துள்ளார்.
அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை ஏற்றுள்ள முஸ்ம்கள் ஒருக்காலும் மண்ணை வணங்க மாட்டார்கள்.
இப்பாடன் விளக்கம் இப்படி என்றால் பாடல் முழுவதும் இந்தியாவை துர்க்கையாகவும், சரஸ்வதியாகவும், இந்துக்களின் இன்னபிற பெண் கடவுள்களாகவும் சித்தரிக்கிறது. அதாவது சரஸ்வதி, துர்க்கை ஆகியோரை நாங்கள் வணங்குகிறோம் என்பது ஒட்டு மொத்த பாடன் கருத்தாகும்.
ஒரு முஸ்லிம் எப்படி இவற்றை வணங்க முடியும். அவ்வாறு கூறுவது இந்திய அரசியில் சாசனம் வழங்கியுள்ள மத உரிமைக்கு எதிரானது என்பதால் இது தடை செய்யப்பட வேண்டிய ஒரு பாடலாகும். இப்பாடலை பாட மறுப்பது மார்க்க அடிப்படையில் முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும்.
எனவே தேவ் பந்த் உலமாக்கள் இயற்றிய இத்தீர்மானத்தை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் வழி மொழிகிறது என்பதை அறிவிக்கிறோம். இந்த நேரத்தல் இந்தியாவின் உள்துறை அமைச்சரின் கையாலாகாத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்
ப. சிதம்பரம் கலந்து கொண்ட மாநாட்டில் இத்தீர்மானம் இயற்றப்பட்டது உண்மை. இதை சங்பரிவாரம் எதிர்த்தால் ப. சிதம்பரம் என்ன பதில் சொல்யிருக்க வேண்டும்? இப்பாடல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது; முஸ்ம்களின் மத நம்பிக்கைக்கு எதிரானது. இதை பாட வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் இல்லை என்று தான் அவர் கூறியிருக்க வேண்டும்.
ஆனால் ப. சிதம்பரம் சொல்யிருக்கும் பதில் வெட்கக் கேடானது. உள்துறை அமைச்சர் பதவி வகிக்க அவர் தகுதியற்றவர் என்பதைப் பறை சாற்றும் வகையில் அவரது பதில் அமைந்துள்ளது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக்குத் தெரியாது என்பது அவரது பதில். இதன் அர்த்தம் தெரிந்திருந்தால் கலந்திருக்க மாட்டேன்; இத்தீர்மானம் தவறானது என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. ப.சிதம்பரமும் சங்பரிவாரத்தின் குரலையே எதிரொக்கிறார். இதுபோன்ற கோழைகளை அழைத்து மாநாடு நடத்துவோர் இனியாவது சொந்தக் கால் நிற்க பழக வேண்டும்.
நமக்கு ஒரு பிரச்சினை என்றால் எவனாக இருந்தாலும் நம்மைக் கைவிட்டு விடுவதை ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக ப. சிதம்பரம் முஸ்லிம் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ப. சிதம்பரம் என்ன? அகில உலகமே திரண்டு வந்து வந்தே மாதரத்தை நியாயப்படுத்த முன்வந்தாலும் இஸ்லாத்துக்கு எதிரான அப்பாடலை முஸ்லிம்கள் பாட மாட்டார்கள் என்பதை மீண்டும் திட்டவட்டமாக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் அறிவிக்கிறோம்.
உங்கள் நாவுகளால் அவதூறு பரப்பியதை எண்ணிப் பாருங் கள்! உங்களுக்கு அறிவில்லாதவை உங்கள் வாய்களால் கூறினீர் கள். அதை லேசானதாகவும், எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 24:15)
Courtesy :tntj.net
-பி.ஜே