திரைத்துறையினரின் தொடர் தீவிரவாதம் - தூங்கும் சென்சார் -
நன்றி : உணர்வு 16-10-2009
இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொருவரையும் தீர்த்துக்கட்டும் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் அதன் வெற்றியை தொடர்ந்து அதே பார்முலாவில் இன்னொரு படத்தையும் தந்துள்ளார். வழக்கமாக அர்ஜூன் அல்லது விஜய்காந்த் நடிக்கும் படங்கள் தான். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் அந்த ஃபார்முலாவை இப்போது கமலஹாசன் கையில் எடுத்துள்ளார்.
படத்தில் வரும் காட்சிகள் சில...
அப்துல்லாஹ் - அல்காயிதாவின் டைரக்ட் காண்டாக்ட். 42 இடங்களில் டிரையினிங் காம்ப் நடத்தி தீவிரவாதிகளுக்கு ஜிஹாத் பயிற்சி கொடுத்தவன். அதில் 20 காம்ப் இந்தியாவில் உள்ளது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் அவனிடம் டிரையினிங் ஆகி இருக்காங்க. எல்லோரும் 16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
அஹமதுல்லாஹ் - இவன் தாலிபான். கந்தகாரில் பயிற்சி பெற்றவன். அப்துல்லாவின் வலது கை. ஹமாஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் குரூப்புடன் இவனுக்கு கனெக்ஷன் உண்டு. லஷ்கர் இ தய்யிபா டெர்ரரிஸ்டின் மாஸ்டர் மைண்ட்டான முஸம்மிலுக்கு இவன் வெரி குளோஸ்.
இனாயதுல்லாஹ் - ஜமாஅத்து தவா வின் ஏரியா டெபுடி கமாண்டர். லஷ்கர் இ தய்யிபாவின் பொலிடிக்கல் விங்க். சாப்ட்வேர் எஞ்சினியர். படத்துக்குள்ளே தகவலை ஒளித்து வைப்பதில் இவன் கில்லாடி. பல டெர்ரரிஸ்ட் அமைப்பின் வெப்சைட்டிற்கு இவன் தான் டிசைனர்.
கரம்சந்த்லாலா - இந்து. ஏ.கே.47, ஆர்.டி.எக்ஸ் போன்ற எதுவாக இருந்தாலும் காசு கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் சப்ளை செய்வான்.
கமல்ஹாசன் பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு கமிஷனர் மோகன்லாலை மிரட்டி சிறையிலிருக்கும் இந்த நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறார். இவர்களில் இருவர் கோவையில் வெடிகுண்டு தாக்;குதல் நடத்தியதற்காக கமிஷனரால் கைது செய்யப்பட்டவர்கள்.
இந்த படம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படம். அதாவது கோவை கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றதால் கைது செய்யப்பட்டது போலவும் குஜராத் கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் அதன் காரணத்தால் தீவிரவாதியாகி இந்துக்களை கொல்ல குண்டு வைத்ததாகவும் இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். ஹமாஸ், லக்ஷர் தெய்பா, ஜம்அத்தே தவா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று போலீஸ் அதிகாரி கூறுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணை மீட்க போராடிவரும் ஹமாஸ் என்ற ஜனநாயக அமைப்பையும் இந்தப் படம் தீவிரவாதிகள் லிஸ்டில் சேர்த்துள்ளது.
இந்த 4 தீவிரவாதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் நகரத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் என கமல் மிரட்டுவதால் அதன் காரணமாக அவர்களை விடுவிக்க போலீஸ் ஒத்துக் கொள்கின்றது. அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்க கொண்டு செல்லும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் முஸ்லிம். பெயர் ஆரிப்.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆரிப் இருந்தாலும் அவரையும் கண்காணிக்கும் படி கமிஷனர் சொல்லி அனுப்புகிறார். மொத்தத்தில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று இந்த சினிமா சொல்கிறது. அந்த தீவிரவாதிகள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆரிபை நக்கலடிப்பது போலவும் ஆரிபை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வது போலவும் காண்பிக்க படுகின்றது.
இந்த நான்கு தீவிரவாதிகளில் முஸ்லிமான மூன்று பேரும் அப்பாவி மக்களை கொல்பவர்கள். ஆனால் இந்துவான கரம் சந்தோ யாரையும் கொல்வதில்லை. காசுக்காக ஆர்.டி.எக்ஸ் சப்ளை பண்ணுபவன், அவ்வளவு தான். தவறுக்கு வருந்துபவன், ஆனால் முஸ்லிம்களோ காபிர்களை கொல்ல வேண்டுமென்று துடிப்பவர்கள் போல் காட்சிகள் இருக்கின்றன.
இந்த நால்வரையும் விடுவித்த கமல் அவர்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது போல் ஜீப்பில் ஏறச் சொல்ல அதில் கமல்ஹாசனால் வைக்கப்பட்ட வெடிகுண்டின் மூலமாக அந்த நால்வரும் சாகின்றனர். இது தான் கதை.
முஸ்லிம் தீவிரவாதிகளை போலீஸ்காரர்கள் கூட விட்டுவிடுகின்றனர். எனவே அவர்களை நாமே கொல்வது சிறந்தது என்கிறார் கமல். ஏற்கனவே கமலை அடையாளம் காட்டியவர் கூட கமல் செய்தது சரி எனக்கருதி அவரை அடையாளம் சொல்ல மறுக்கிறார். அவர் இருக்கும் இடத்தை கம்பியூட்டர் மூலம் கண்டுபிடிக்கும் ஒரு ஐ.டி மாணவன், கமலை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியாக கமல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கமிஷனர் மோகன்லால் கூட கமல்தான் குண்டு வைத்தவர் என்பதை அறிந்தும் அவரைப் போக செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு இந்துத்துவ வெறியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சென்சார் போர்டு எவ்வாறு அனுமதித்தது என நமக்கு புரியவில்லை. இந்த படம் சென்சார் போர்டுக்கு செல்லாமல் வந்திருக்க வேண்டும், அல்லது லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது அங்கும் காவிசிந்தனை ஊடுருவி இருக்க வேண்டும்.
இதை சமீபத்திய கோர்ட் தீர்ப்பு உண்மைபடுத்துகின்றது. வக்கீல்களை மோசமாக சித்தரித்ததாக கூறி விஜய் மற்றும் சிவகாசி பட தயாரிப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
வக்கீல்களை மோசமாக சித்தரிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களுக்கு எந்த கட்டப்பாடும் கிடையாது, தாங்கள் விரும்பியதை திரையிடலாம் எனக் கருதக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் தணிக்கை துறையையும் சாடியுள்ளார்.
சென்சார் போர்டு செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், தணிக்கை துறையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்சார் போர்டு ஒப்புக்கு செயல்படுகிறது, உண்மையாக செயல்படவில்லை என்ற கருத்துக்கு உறுப்பினர்கள் இடம் கொடுக்கக் கூடாது. சமூக நலன் கருதி ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
சினிமாவில் மற்றவர்களை அவதூறாக, மோசமாக மற்றும் ஆபாசமாக சித்தரிக்காமல் இருக்கும்படி செய்வதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவதூறான காட்சிகளை பொழுதுபோக்கு எனும் பெயரில் எடுக்கக்கூடாது. தகுந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சமுதாயத்தின் மீது அவதூறு கூறுவதை எவ்வாறு தணிக்கை துறை அனுமதித்தது. இலங்கையில் பயங்கரவாதம் செய்தும் இந்தியாவில் ராஜீவ் காந்தியை கொலையும் செய்த விடுதலை புலிகள் எனும் தீவிரவாதிகளை காண்பித்திருந்தாலும் ஏற்றிருக்கலாம். அவர்கள் இந்துக்கள் என்பதால் கமல் அவர்களை விட்டுவிட்டாரா?
மாலேகான் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற சன்னியாசி பிரக்யா சிங், லெப்டினென்ட் புரோகித் உட்பட உள்ளவர்களை தீவிரவாதியாக காண்பித்து இருந்தாலும் இது உண்மை எனக் கூறலாம். தீவிரவாதிகள் அபினவ் பாரத், ஆர்,எஸ்,எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்றதாக கூறினாலும் அது உண்மையானது. ஆனால் முற்றிலும் அதை மூடி மறைத்துவிட்டு இந்து தீவிரவாதிகள் செய்த செயல்களையெல்லாம் முஸ்லிம்கள் செய்ததாக காண்பித்திருக்கிறார்கள்.
இதை திரையாக்கியவனின் கையை ஒடித்து அல்லது திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் சென்று திரையை கிழித்து தியேட்டரை தரைமட்டமாக்கினால் இனி எவனும் இது போன்ற திரைப்படத்தை எடுக்கமாட்டான். போட்ட பணம் கூட வராது என்ற நிலையில் அது தடுக்கப்படும். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற சங்பரிவாரின் செயல்.
ஆனால் முஸ்லிம்கள் அதை செய்யமாட்டார்கள் எனும் தைரியத்தில் தான் இவ்வாறு சினிமா எடுக்கப்படுகின்றது. அதுவும் அவர்கள் மீது அவதூறி கூறி. அராஜகம் செய்ய இஸ்லாத்தில் இடமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் மௌனமாக இருக்கின்றனர். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட வேண்டும். இந்த படம் தடைசெய்யப்பட வேண்டும்.
அத்துடன் இதற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களை நேரடியாக தாக்குவதையும் வன்முறையை ஊக்குவிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்கலாகாது. முஸ்லிம்களும் நடுநிலைவாதிகளும் சமூக ஆர்வலர்களும் அதற்கு முன்வர வேண்டும்.
நன்றி : உணர்வு