உயர் கல்வி பெறுவது எப்படி? மாதம் பல லட்சம் ரூபாய் இந்தியாவில் சம்பாதிப்பது எப்படி?
மாத சம்பளம் 30 ஆயிரம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை கிடைக்கின்றது.
இங்கு படிப்பதன் மூலம் வேலை தேடும் அவசியம் இல்லை, மாத சம்பளமும் லட்சக்கணக்கில் கிடைக்கின்றது. மேலும் இந்த நிறுவனங்களில் கல்வி கட்டணமும் குறைவு, இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவிதொகை வழங்க போட்டி போட்டுக் கொண்டு பல அமைப்புகள் முன்வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணமே இல்லை என்ற அளவிற்கு மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. IIT, IIM, NIT
ஏன்?
ஏன் உயர்கல்வி நிறுவனங்களில் முஸ் ம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு? எப்படி உயர்சாதியினர் மட்டும் இங்கு படிக்கின்றனர், முத ல் இங்கு படிப்பது கடினம் என்று, உயர்சாதியினர் பொய்களை பரப்பிவிடுகின்றனர். இந்த பொய்களே இந்த நிறுவனங்களை பற்றி பிறர் நினைப்பதையே தடுகின்றது, இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணமாகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு சேர்ந்து படிப்பது? உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன,
இந்த தேர்வுகளில் பங்கு பெற்று அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவதான் மூலம் இங்கு படிக்கலாம். அதிக மதிப்பெண் எடுப்பது என்பது மிக எளிதானதே அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும், முறையான திட்டமிடுதலும், சரியான வழிகாட்டுதலும் உங்களின் ஆர்வமும் கடின உழைப்பும் உங்களுக்கு வெற்றியை தேடிதரும். உங்களுக்கு சரியான முறையான வழிகாட்டுதல் வழங்க டி.என்.டி.ஜே மாணவர் அணி தயாராக உள்ளது.
IIT - JEE
இது IIT, IISC யில் B.E/B-Tech படிப்பதற்கு நடத்தப்படுகின்றது. இங்கு படித்து முடித்தவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் முத ல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் இந்தியாவில் கிடைகிறது
அடிப்படை தகுதி
12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடம் அல்லது Vocational குரூப் படித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம்
விண்ணப்ப படிவம் டிசம்பர் மாதத்தில் எல்லா ஐ.ஐ.டிலியிலும் கிடைக்கும். ஜனவரி 4 ஆம் தேதிக்குள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெறும். 044-22578223 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சென்னை ஐ.ஐ.டியில் மேலும் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.