நக்ஸல் தீவிரவாதத்தால் 2600 பேர் உயிரிழப்பு: கடந்த மூன்று வருடங்களில் மட்டும்


நக்ஸல் தீவிரவாதத்தால் 2600 பேர் உயிரிழப்பு: கடந்த மூன்று வருடங்களில் மட்டும்! நக்ஸல்வாதிகள், நக்ஸல்பாரிகள், மயோயிஸ்டுகள் என்று பலபெயர்களால் அழைக்கப்படும் நக்ஸலைட்டுகளின் வன்முறை வெறியாட்ட பயங்கரவாத செயல்களால் கடந்த 3 வருடங்களில் மட்டும் 2600க்கும் மேற்பட்டவர்கள்

கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், சட்டீஷ்கர், பிஹார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசாவில் மட்டுமே 2212 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஜனவரி 2006 இலிருந்து இந்த வருடம் ஆகஸ்ட் வரை மட்டுமே பெறப்பட்ட தகவல். இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த கால இடைவெளியில் நக்ஸலைட்டுகளினால் சுமார் 5800 வன்முறைச் சம்பவங்கள்நிகழ்ந்துள்ளன. மத்திய அரசுக்கு மிகவும் தலைவலியைக் கொடுத்து வருவது இந்த நக்ஸலைட்டுகள் தான்.

1967 இல் மேற்கு வங்க மாநிலத்தில் நக்ஸல்பாரி எனப்படும் குக்கிராமத்தில், சிபிஐ மார்க்ஸிஸ்ட் இயக்கத்தில் இருந்து பிரிந்த கம்யூனிஸ்டுகளால் தொடங்கப்பட்ட அமைப்பே இது. அகில இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள்
அமைப்பு என்ற இயக்கத்தையும் (AICCCR) துவங்கினர். தற்போது, மேற்கு வங்கம் உட்பட, சட்டீஷ்கர்,ஒரிஸ்ஸா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், பிஹார், உத்தர பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இவர்கள்மிகப்பரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

மேற்கண்ட மாநிலங்களையும் சேர்த்து 20 மாநிலங்களில், 223 மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் ஊடுறுவியுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இழப்புகளின் கணக்கெடுப்பில் சூரப்புலியான நம் அரசு, இதனை வேரோடு அழிப்பதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், கடவுளை மற; மனிதனை நினை எனக்கூறிக் கொண்டு, கடவுள் பேரினால் தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என நாத்திகம் பேசும் பகுத்தறிவுவாதிகள்(!) கடவுள் மறுப்புக் கொள்கை உள்ள
இந்த வன்முறையாளர்கள் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்? அதேபோல், மத்திய மாநிலஅரசுகளும், முஸ்லிம்கள் மேல் சந்தேகக்கண்களை செலுத்திக் கொண்டு இல்லாமல், இந்த நக்ஸலைட்டுகளை ஒழிக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

செய்தி: ஃபைசல் ரியாத்

courtesy :tntj.net