கத்தரில் உள்ள இஸ்லாமிய அழைப்பு மையம் மூலம் வெளியிடப்பட்ட -

சகோ. பி.ஜெ. எழுதிய புத்தகங்கள்.


?ui=2&view=att&th=124e3a7d2fdf0c16&attid=0.1&disp=attd&realattid=ii_124e3a7d2fdf0c16&zw

?ui=2&view=att&th=124e3a7f6a2b8013&attid=0.1&disp=attd&realattid=ii_124e3a7f6a2b8013&zw


சௌதியில் இஸ்லாமிய அழைப்பு மையம்

சார்ப்பாக " திருமறையின் தோற்றுவாய் " என்ற சகோதரர் பி .ஜே அவர்கள் எழுதிய நூலை புதிதாக வெளியிட்டு இருந்தார்கள்.அதனுடைய சில பிரதிகள் உம்ரா சென்ற சகோதர்கள் மூலம் கிடைக்கப் பெற்றோம் .

கத்தரில் சகோதரர் பி.ஜே அவர்கள் எழுதிய நூல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.





வந்தே மாதரம் பாடல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது!


Vande-Mataram

உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்த் நகரில் ஜம்மியதே உலமாயே ஹிந்த் அமைப்பின்சார்பில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்களில் வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதும் ஒன்றாகும்.

இம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று சங்பரிவார கும்பல் கூச்சலிட்டு வருகின்றனர்.

சங்பரிவாரம் என்னதான் கூக்குரல் போட்டாலும் முஸ்லிம்கள் ஒருபோதும் வந்தே மாதரம் பாடலை பாடவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறோம்.

வரலாற்று ரீதியாக இப்பாடன் தோற்றம் முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்பாடன் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது என்பதால்தான் இப்பாடலை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.

வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற பெயரில் ஒரு நாவல் எழுதப்பட்டது. இந்து – முஸ்லிம் மோதலை மையமாகக் கொண்ட இந்நாவல், வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுவோர் இந்துக்கள் என்றும், பாட மறுப்போர் முஸ்லிம்கள் என்றும் இனம் காணப்பட்டு அதனடிப்படையில் முஸ்லிம்கள் அழித் தொழிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்துக்களின் கொள்கைப் பிரகடனமாக இப்பாடல் அமைந்துள்ளதால்தான் இந்துத்துவா சக்திகள் இப்பாடலைப் பாடுவதை தேச பக்தியின் அடையாளமாகச் சித்தரிக்கின்றனர். ஒரு காலத்தில் காங்கிரஸ் மாநாடுகளிலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இப்பாடல் பாடப்பட்டு பின்னர் முஸ்லிம்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

1950ல் “ஜனகனமன…” என்பது தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டு வந்தே மாதரம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டது.

ஆனாலும் சங்பரிவாரத்தினரும், சினிமாக் கூத்தாடிகளும் வந்தே மாதரம் என்பதுதான் தேச பக்தியின் அடையாளம் என்பது போல்தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர்.

வந்தே மாதரம் என்பதன் பொருள் என்ன? “வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்று பாரதியார் பாடி நாடு எனும் தாயை வணங்குகிறோம் என்பதுதான் இதன் பொருள் என்று சொல்த் தருகிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் கோடாரிக் காம்பான ஏ.ஆர். ரஹ்மான்என்பவரும் வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே வணக்கம் என்று இசை அமைத்து, இதன் அர்த்தத்தை அனைவரையும் அறியச் செய்துள்ளார்.
அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை ஏற்றுள்ள முஸ்ம்கள் ஒருக்காலும் மண்ணை வணங்க மாட்டார்கள்.

இப்பாடன் விளக்கம் இப்படி என்றால் பாடல் முழுவதும் இந்தியாவை துர்க்கையாகவும், சரஸ்வதியாகவும், இந்துக்களின் இன்னபிற பெண் கடவுள்களாகவும் சித்தரிக்கிறது. அதாவது சரஸ்வதி, துர்க்கை ஆகியோரை நாங்கள் வணங்குகிறோம் என்பது ஒட்டு மொத்த பாடன் கருத்தாகும்.

ஒரு முஸ்லிம் எப்படி இவற்றை வணங்க முடியும். அவ்வாறு கூறுவது இந்திய அரசியில் சாசனம் வழங்கியுள்ள மத உரிமைக்கு எதிரானது என்பதால் இது தடை செய்யப்பட வேண்டிய ஒரு பாடலாகும். இப்பாடலை பாட மறுப்பது மார்க்க அடிப்படையில் முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகும்.

எனவே தேவ் பந்த் உலமாக்கள் இயற்றிய இத்தீர்மானத்தை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் வழி மொழிகிறது என்பதை அறிவிக்கிறோம். இந்த நேரத்தல் இந்தியாவின் உள்துறை அமைச்சரின் கையாலாகாத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்

ப. சிதம்பரம் கலந்து கொண்ட மாநாட்டில் இத்தீர்மானம் இயற்றப்பட்டது உண்மை. இதை சங்பரிவாரம் எதிர்த்தால் ப. சிதம்பரம் என்ன பதில் சொல்யிருக்க வேண்டும்? இப்பாடல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது; முஸ்ம்களின் மத நம்பிக்கைக்கு எதிரானது. இதை பாட வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் இல்லை என்று தான் அவர் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் ப. சிதம்பரம் சொல்யிருக்கும் பதில் வெட்கக் கேடானது. உள்துறை அமைச்சர் பதவி வகிக்க அவர் தகுதியற்றவர் என்பதைப் பறை சாற்றும் வகையில் அவரது பதில் அமைந்துள்ளது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக்குத் தெரியாது என்பது அவரது பதில். இதன் அர்த்தம் தெரிந்திருந்தால் கலந்திருக்க மாட்டேன்; இத்தீர்மானம் தவறானது என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. ப.சிதம்பரமும் சங்பரிவாரத்தின் குரலையே எதிரொக்கிறார். இதுபோன்ற கோழைகளை அழைத்து மாநாடு நடத்துவோர் இனியாவது சொந்தக் கால் நிற்க பழக வேண்டும்.

நமக்கு ஒரு பிரச்சினை என்றால் எவனாக இருந்தாலும் நம்மைக் கைவிட்டு விடுவதை ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக ப. சிதம்பரம் முஸ்லிம் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ப. சிதம்பரம் என்ன? அகில உலகமே திரண்டு வந்து வந்தே மாதரத்தை நியாயப்படுத்த முன்வந்தாலும் இஸ்லாத்துக்கு எதிரான அப்பாடலை முஸ்லிம்கள் பாட மாட்டார்கள் என்பதை மீண்டும் திட்டவட்டமாக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் அறிவிக்கிறோம்.

உங்கள் நாவுகளால் அவதூறு பரப்பியதை எண்ணிப் பாருங் கள்! உங்களுக்கு அறிவில்லாதவை உங்கள் வாய்களால் கூறினீர் கள். அதை லேசானதாகவும், எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 24:15)

Courtesy :tntj.net

-பி.ஜே



ஐஐடி யில் முஸ்லீம்கள் மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!
கல்வி வழிகாட்டி

அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது.

கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை,படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.

இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது.

படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை).மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது,சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர். இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை .

மாணவ மாணவியர்களே!

இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான்,அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம்.

ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJமாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. K.
ஹஸன் B.E – 9940611315
e-mail : tntjedu@gmail.com

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
(
ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)
டிசம்பர் 19 (19/12/09) இன்ஷா அல்லாஹ்

தேர்வு நடைபெறும் தேதி
ஏப்ரல் 11 (11/04/10)
இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி
மே 26 (26/05/10) இன்ஷா அல்லாஹ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairmen, JEE, IIT Madras, Chennai – 600036
Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்
விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)
044-2250 4500 (
காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)

விண்ணப்பத்தின் விலை :
Rs.1,000,
(
ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு
அக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
a) +2-
வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,
b) +2
வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.
c) 3
ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்

குறைந்தபட்ச மதிப்பெண்
+2-
வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. K.
ஹஸன் B.E – 9940611315

செய்தி:

S.சித்தீக்.M.Tech
TNTJ
மாநில மாணவரணி செயளலார்



ஹஜ் செய்ய செல்வோர்கள் நபி வழி அடிப்படையில் எவ்வாறு ஹஜ் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் மார்க்கம் சொல்லித்தராத தவறான ஹஜ் வழிமுறைகளை ஹஜ் செய்பவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹஜ் செய் முறை விளக்கம்என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தியது.

இதில் ஹஜ் கிரிகைகள் பற்றிய முழு விளக்கங்கள் ஆதாரத்தோடு இடம் பெறுவதோடு ஹஜ் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது!

http://www.tntj.net/?p=7521



குர்பானியின் சட்டங்கள்


camelஇஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,
நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)

நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)

நாமே அறுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

தொகுப்பு:

மௌலவி எம்.எஸ் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி (வெப்மாஸ்டர்-TNTJ)